வெளிநாட்டவர் ஒருவருக்கு அதிக விலைக்கு கொத்து ரொட்டி விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது
கொழும்பு - புதுக்கடை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை கடும் தொனியில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவு விற்பனை நிலையமொன்றின் காசாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த இக்கட்டான நிலை
குறித்த உணவகத்தில், உணவுப் பெற்றுக் கொள்ளச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, அந்த உணவகத்தைச் சேர்ந்தவர் 1,900 ரூபாய் என அறிவித்துள்ளார்.
விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், உணவு விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் சுற்றுலாப் பயணியை மிரட்டும் தொனியில் எச்சரித்திருந்தார்.
இவை, அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
