இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் புதிய தலைவர் ஏகமனதாக தெரிவு
இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வணக்கத்திற்குரிய டானியல் தியாகராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று கொழும்பு ஆங்கிலிக்கன் மறைமாவட்டத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டமானது, தேசிய கிறித்தவ மன்றத்தின் தலைவரான மெதடித்த திருச்சபை தலைவர்
அருட்தந்தை எபினேசர் யோசேப் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு பின்வரும் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதி வணக்கத்திற்குரிய டானியல் தியாகராஜா
தலைவராக அதி வணக்கத்திற்குரிய டானியல் தியாகராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
துணைத் தலைவர்களாக கிறிஸ்தவ சீர்திருத்த தேவாலயங்களின் தலைவர் வண பிதா ஷெர்லி பேபர் மற்றும் பேக் டு த பைபிள் அமைப்பின் டொக்டர் மயூகா பெரேராவும் தெரிவாகினார்.
பொதுச் செயலாளராக ரெ.சுஜிதர் சிவநாயகமும், பொருளாளராக ஒலிவர் விக்கிரமசிங்கவும், உதவி பொருளாளராக கலாநிதி அஜித் விக்ரமசிங்கவும் தெரிவாகினர்.
நிர்வாகக் குழுவிற்கும் ஏழு உறுப்பினர்களும் இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தென்னிந்திய திருச்சபையின் சார்பில் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள இயலாத அருட்பணி பத்மதயாளனிற்கு பதிலாக வணபிதா ஜெபசிங் சாமுவேல் தெரிவானார்.
மேலும், அருட்பணி சிறீலால் கருணாரத்ன மற்றும் செல்வி வஸ்ரி அன்ரூயா, செல்வி பிறின்சி டிலீசா யெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதி பிரார்த்தனை
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இறுதி பிரார்த்தனை செய்து ஆசி வழங்கினார். தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வணக்கத்திற்குரிய டானியல் தியாகராஜா தனது பதவிக்காலத்தில், இரண்டாவது தடவை தலைமை ஏற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இலங்கை திருச்சபை (அங்கிலிக்கன்), மெதடிஸ்த திருச்சபை, தென் இந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.), இலங்கை பெப்டிஸ்ட் திருச்சபை, பிரஸ் பெற்றேரியன் திருச்சபை, இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபை (சி. ஆர்.சி.), லங்கா லூதரன் சபை, இர ட்சணியசேனை ஆகிய சபைகள் உறுப்புரிமையைப் பெற்றுள்ளன.
அத்துடன் கிறிஸ்தவ ஒருமைப் பாட்டு அமைப்புக்களான வை. எம்.சி.ஏ.வை.டபிள்யூ.சி.ஏ, இலங்கை வேதாகமச் சங்கம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், இலங்கை மாணவர் இயக்கம், கிறிஸ்துவுக்காக இளைஞர் இயக்கம், கொழும்பு இறையியல் கல்லூரி ஆகியனவும் உறுப்புரிமை பெற்று இணைந்து சேவையாற்றுகின்றன.
1947ல் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் என்று உருவாக்கப்பட்டு பல்வேறு சமய, சமூக
பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 48 நிமிடங்கள் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
