பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளிக்கு எதிராக பிள்ளையான் அணி போராட்டம்(Video)
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை பகிரங்கப்படுத்த கோரி ''குண்டுத் தாக்குதலை திசை திருப்பாதே, உண்மையை உலகறியச் செய்'' எனும் தொனிப்பொருளில் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால் இன்று (10.09.2023) ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கண்டன பேரணியானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்திலிருந்து கல்லடி பாலம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற இக் கண்டனப் பேரணியின் போது சனல்-4 காணொளிக்கு எதிராகவும், குரல் எழுப்பியிருந்தனர்.
சனல் 4 காணொளி தொடர்பில் சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்! பகிரங்க குற்றச்சாட்டு (video)
குறித்த கண்டனப் பேரணி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தண் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri