இதுவரை 19 மனித எலும்புக்கூடுகள் மீட்பு : மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி ஜூன் 26இல்..!
யாழ்.அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழிஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்வின் போது இன்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில் இருந்து வெளியே மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக் கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் என சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி
யாழ்- அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று(07) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணியானது நேற்றுடன் தற்காலிகமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளது.

இவ் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியானது மேலும் 45 நாட்களுக்கு நீடித்து நீதவான் ஆ.ஆனந்தராஜா நேற்று அனுமதி அளித்திருந்தார்.
45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு நேற்று சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதவான் நீதிமன்ற நீதபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26ம் திகதி நீதவான் அனுமதித்துள்ளார்.
குறித்த உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 10 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam