செம்மணி புதைகுழி அறிக்கை : நிராகரிக்கும் மக்கள் செயல் அமைப்பு

Jaffna Northern Province of Sri Lanka chemmani mass graves jaffna
By Theepan Oct 26, 2026 03:05 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழிகள் பற்றிய பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தடவியல் தொல்லியல் அகழாய்வு குழுவின் மூன்றாவது இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மக்கள் செயல் அமைப்பு அறிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று(25.10.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைப்பின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இயற்கைப் பேரிடர் காரணமாக

மேலும் தெரிவிக்கையில், பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தடவியல் தொல்லியல் அகழாய்வு குழுவினர் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனிதஎச்சங்கள் தொகையாக மீட்கப்பட்ட புதைகுழிகள் தொடர்பான தமது மூன்றாவது இடைக்கால அறிக்கையை 2026 ஒக்டோபர் 10ஆம் திகதியிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு சமர்ப்பித்துள்ளனர். 

செம்மணி புதைகுழி அறிக்கை : நிராகரிக்கும் மக்கள் செயல் அமைப்பு | Chemmani Mass Grave Jaffna Report Rejected

இவ்வறிக்கையின் சுருக்கத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவ, செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழிகளின் அகழாய்வுச் சுருக்கத்தை பின்வருமாறு விவரித்துள்ளார்.

இவ்வறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட பொருள்சார் ஆதாரங்களின் தொகுப்பு, ஆய்வு செய்யப்பட்ட புதைப்புகளின் தன்மை மற்றும் பண்பு குறித்து தனித்து ஒரு உறுதியான முடிவுக்கு வரப் போதுமானதல்ல.

ஆயினும் கிடைத்த தொல்பொருட்களும் அவற்றுடன் தொடர்புடைய சூழல்சார் ஆதாரங்களும், உலகின் பிற பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்ட மறைமுகப்புதைப்புத் தளங்களைவிட, முறையான புதைப்பு நடைமுறைகளால் வகைப்படுத்தப்படும் சூழல்களுடன் இந்தத் தளம் அதிக ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டுகின்றன.

தனித்தனி புதைப்புகள் ஒப்பீட்டளவில் அதிக அடர்த்தியில் காணப்படுவது மட்டும், இறந்தவர்கள் எந்தச் சூழ்நிலையில் புதைக்கப்பட்டனர் என்பதை நிறுவுவதில்லை.

இத்தகைய அதிக எண்ணிக்கையிலான புதைப்புகள் ஒரு தொற்றுநோய் அல்லது வேறு வகையான இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்டிருந்தால், அவற்றுடன் தொடர்புடைய பொருள்சார் பண்பாட்டு எச்சங்கள் குறைந்த அளவில் இருப்பது எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.

இவ்வாறான சூழலில் அதிகளவிலான பொருட்காணிக்கைகளையோ தனிப்பட்ட உடைமைகளையோ சேர்த்துப் புதைப்பதைவிட, இறந்தவர்களின் உடல்களை விரைவாக அப்புறப்படுத்துவதே முதன்மைக் கவலையாக இருந்திருக்கலாம். எனவே தொல்பொருட்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதையோ அவற்றின் வகைகள் குறைவாக இருப்பதையோ எந்தவொரு புதைப்புச் சூழலுக்குமான முடிவான சான்றாகக் கருதக்கூடாது.

சித்துப்பாத்தியில் மீட்கப்பட்ட எச்சங்கள்

செம்மணி சித்துப்பாத்தி மயானம், யாழ்ப்பாண மாவட்டத்தின் அரியாலை எனும் ஊரின் எல்லையிலுள்ள சைவர்களின் எரிகாடு எனும் வகைக்குரிய ஒரு நிகழ்விடம் என்பதையும் தாண்டி, 1995 பிற்பகுதியில் யாழ்ப்பாண குடாநாடு முழுமையாக இலங்கை அரச படைகளினால் கைப்பற்றப்பட்டு முழுமையான இராணுவ அடக்குமுறை நிலவிய சுமார் பத்தாண்டு காலப்பகுதிக்கு யாழ்ப்பாண நகரின் எல்லையில் இருந்த கொடூரமான இராணுவ சோதனைச்சாவடியின் மிக அருகிலுள்ள ஒரு மயானபூமி என்பதை தொல்லியல் குழுவினர் மிக வசதியாக மறந்தும் - மறைத்துமுள்ளனர்.

செம்மணி புதைகுழி அறிக்கை : நிராகரிக்கும் மக்கள் செயல் அமைப்பு | Chemmani Mass Grave Jaffna Report Rejected

இவ்வறிக்கையின் முடிவுகளை எட்டுவதற்கு பேராசிரியர் தலைமையிலான குழுவினர் : மண் அடுக்கியல், அடையாளம் காணப்பட்ட தனிநபர் எச்சங்கள், உடற்கூற்று இணைப்பு இழந்த மனித எலும்புகளின் திரட்சிகள், மண்டையோடுகள் திசையமைவு, கைகள் அமைந்துள்ள நிலை, எலும்புக்கூடுகளின் செங்குத்துப்பரவல், எலும்புக்கூடுகளின் கிடைமட்ட பரவல், ஆடைகள், தொல்பொருட்கள், மீட்கப்பட்ட நாணயங்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகள், நிலத்தில் ஊடுருவும் ரேடார் ஆய்வு போன்ற துணைத்தலைப்புக்களின் கீழ் தமது தொல்லியல் அறிவை பிரயோகித்துள்ளதாக நிறுவியுள்ளனர்.

விசேடமாக அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சமானது ஜீவசமாதி நிலையில் முறையாக இறுதிச்சடங்குடன் புதைக்கப்பட்ட உடலுக்குரியதாயிருக்கலாம் என்பதும் அறிக்கையின் ஒரு பகுதியாயிருக்கின்றது.

சித்துப்பாத்தியில் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மீதான கார்பன்-காலவியல் பரிசோதனைகள் எடுகோள் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு பதிலாக சித்துப்பாத்தியில் மீட்கப்பட்ட எச்சங்கள் முழுவதும் சர்வதேச மேற்பார்வை பொறிமுறையொன்றின் கீழ் உலகளாவிய நியமங்களின் படி கார்பன்-காலவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மக்கள் செயல் குறிப்பாக வலியுறுத்துவதுடன், தேவையேற்படின் இலங்கை அரசின் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக இச்செலவீனங்களை பொறுப்பேற்கவும் உலகத்தமிழ் மக்கள் தயாராயிருப்பதையும் இவ்விடத்தில் வெளிப்படுத்துகின்றோம்.

நாமலின் பாரிய மோசடியில் சிக்கிய மற்றுமொரு பெண்! பயமின்றி காட்டிக்கொடுத்த முக்கிய புள்ளிகள்

நாமலின் பாரிய மோசடியில் சிக்கிய மற்றுமொரு பெண்! பயமின்றி காட்டிக்கொடுத்த முக்கிய புள்ளிகள்

களுத்துறையில் முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

களுத்துறையில் முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US