நேற்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் மீட்பு
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றையதினம் 14ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
நேற்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 266 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள்
இவற்றுள் 257, 258 என அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கழுத்தில் கட்டப்படும் தாயத்து போன்ற தகடு ஒன்றும் சான்றுப்பொருளாக இனங்காணப்பட்டுள்ளது.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.



சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan