செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்குத் தடையற்ற அனுமதி வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் விஜயம் மேற்கொள்வதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் தடையற்ற அனுமதி வழங்கப்படும்.
ஒன்பது வருடங்களின் பின்னர்
கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கையாள்வது குறித்தும், நாட்டின் நல்லிணக்கத்துக்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கும் அரசு விரும்புவதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மக்களைச் சந்திப்பதற்கும், அனைத்து இடங்களுக்குச் செல்வதற்கும் எந்தத் தடையையும் விதிக்கப் போவதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2016 ஆம் ஆண்டு பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்த வேளை செயித் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் அநுர அரசு தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலியப் பிரஜையான வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
