செம்மணி மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஐரோப்பிய ஒன்றியக் குழு இன்று பார்வை!

Jaffna Northern Province of Sri Lanka chemmani mass graves jaffna
By Theepan Apr 21, 2026 08:31 AM GMT
Report

முதலாம் இணைப்பு

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று( 21) செவ்வாய்க்கிழமை அகழ்வுத் தளத்தை நேரில் பார்வையிடவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அகழ்வுப் பணிகளுக்கான நிதிச் செலவினங்களுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததால் பணிகள் தாமதமடைந்தன. எனினும், கடந்த வாரம் இதற்கான நிதி நீதி அமைச்சால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களின் அரசியல் சகாப்தம் இலங்கையில் முடிவுக்கு வந்துவிட்டது! அரசு தக்க பதிலடி

ராஜபக்சக்களின் அரசியல் சகாப்தம் இலங்கையில் முடிவுக்கு வந்துவிட்டது! அரசு தக்க பதிலடி

செம்மணி அகழ்வுப் பணி

இது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது குறித்து இன்றைய நீதிமன்ற அமர்வில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஐரோப்பிய ஒன்றியக் குழு இன்று பார்வை! | Chemmanai Mass Grave

செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியை நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று நேரில் பார்வையிடவுள்ளனர்.

இதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்தது. சர்வதேச ரீதியில் அவதானிக்கப்படும் இந்த விவகாரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த விஜயம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

செம்மணி 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வு பணி இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஐரோப்பிய ஒன்றியக் குழு இன்று பார்வை! | Chemmanai Mass Grave

இந்நிலையில் பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , புதைகுழிக்குள் மழை வெள்ளமும் நிறைந்து காணப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு , செப்டெம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது சுமார் 08 மாத கால பகுதிக்கு பின்னர் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை , 27ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் , சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நாளைய தினம் புதன்கிழமை , யாழ்,நீதவான் நீதிமன்றில் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 160 பரப்பு காணி மோசடி - மோசடிக்கு உதவியவர் கைது

யாழில் 160 பரப்பு காணி மோசடி - மோசடிக்கு உதவியவர் கைது

மேலதிக தகவல்- ராகேஷ்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US