யாழில் 160 பரப்பு காணி மோசடி - மோசடிக்கு உதவியவர் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் புத்தளத்தை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை மோசடியான உறுதி மூலம் காணி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கு கடந்த ஒரு வருட காலமாக பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்தநிலையில் குறித்த நபர் இன்றைய தினம்(21) திங்கட்கிழமை கஸ்தூரியார் வீதி பகுதியில் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam