62.904 மெட்ரிக் தொன் இரசாயன உரம் களஞ்சிய சாலைகளில் உள்ளது - தேவரதன்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 08 கமநல சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு மிகுதியாக 62.904 மெட்ரிக் தொன் இரசாயன உரம் களஞ்சிய சாலைகளில் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தேவரதன் (Thevarathan) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போகத்தின் போது பயிர் செய்கை மேற் கொண்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கென இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்களின் மிகுதி களஞ்சிய சாலைகளில் உள்ளதாகவும் அதாவது கிளிநொச்சி, இராமநாதபுரம், பளை, புளியம்பொக்கணை, முழங்காவில், பூநகரி, அக்கராயன் குளம், உருத்திரபுரம் ஆகிய கமநல சேவை நிலையங்களின் களஞ்சியங்களில் மேற்படி உரம் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 16.244 மெட்ரிக் தொன் யூரியா, 23.452 மெட்ரிக் தொன் டிஎஸ்பி, 23.208 மெட்ரிக் தொன் எம்.ஓ.பீ என்பன உள்ளடங்கலாக 62.904 மெட்ரிக் தொன் இரசாயன உரம் களஞ்சிய சாலைகளில் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தேவரதன் தெரிவித்துள்ளார்.
