துப்பாக்கி வழங்குமாறு சாவகச்சேரி உபதவிசாளர் கோரிக்கை
தென்மராட்சியில் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி மன்ற உபதவிசாளர் ஞா.கிஷோர் முன்வைத்துள்ளார்.
நேற்று(17.10.2025) நடைபெற்ற மாதாந்த அமர்வில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சபை நிதியில் இருந்து
உபதவிசாளரினால் கடந்த சபை அமர்வில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் குரங்கு தொல்லையினை கட்டுப்படுத்து நகராட்சி மன்ற நிதி மூலம் இயங்கு நிலையில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த கோரிக்கையை அனைத்து சபை உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டதையடுத்து சபை நிதியில் இருந்து உடனடியாக துப்பாக்கிகள் கொள்வனவு செய்வது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





