சௌபாக்கியா உற்பத்தி திட்டம் சிங்கைநகர் கிராமத்தில் அங்குரார்ப்பணம்
சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்பு திட்டமானது பருத்தித்துறை பிரதேசசெயலர் பிரிவில் J/414 சிங்கைநகர் பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர்,
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்ளைத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி கிராமிய வளங்களைப் பொருளாதார மயப்படுத்தும்போது அந்தக்கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும். அந்த தொலைநோக்கு சிந்தனையில்தான் இந்த சௌபாக்கியா உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படுகின்றன.
நாடளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள 500 உற்பத்தி கிராமங்களில் சிங்கைநகரும் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இங்குள்ள பனை வளம் - எமது மண்ணின் அடையாளம், அதைக்கொண்டு வெளிநாட்டுச் சந்தைகளில் லாபமீட்டி எமது பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்ப இக்கிராம மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பனம்பாகு மற்றும் பனங்கட்டி உற்பத்திகளை மேற்கொண்டுவரும் இக்கிராமமானது சௌபாக்கியா உற்பத்தி கிராமமாக எதிர்காலத்தில் தொழில்துறை கிராமமாக வளர்ச்சியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர், பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகளும் கலந்து கொண்டுள்ளனர்.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? Manithan
