மீண்டும் வட மாகாணத்தின் ஆளுநராக வர சாள்ஸ் முயற்சி..! அரசியல் ஆய்வாளர் கூறும் விடயம்
வடக்கு மாகாண ஆளுநராக வருவதற்கு சாள்ஸ் முயற்சிக்கிறார் என செய்திகள் வருவதாக அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று (27.01.2023) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி
மேலும் தெரிவிக்கையில், முன்னாள் வட மாகாண ஆளுநராகவும், முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராகவும் சாள்ஸ் இருந்துள்ளார்.
ஆனால் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
சாள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருக்கின்றார்.
தேர்தலை பிற்போட வாய்ப்புகள்
ஆகவே அதனை காரணமாக வைத்து அரசியல் அமைப்பு பேரவை புதிய தேர்தல் ஆணைக்குழுவை உருவாக்க வேண்டும் என்கின்ற ஒரு செயற்பாட்டில் இறங்கி இருப்பதனாலேயும் தேர்தலை பிற்போடக்கூடிய வாய்ப்புகள் இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
எனவே அரசாங்கம் இவ்வாறான விடயங்களை கவனம் எடுப்பதன் மூலம் தான் தேர்தல் தொடர்பான மகிமையை பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என நான் கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
