வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் வாகனம்: நாடாளுமன்றில் எழுந்த கண்டனம்
வவுனியாவில்(Vavuniya) பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் தனியார் வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், விபத்தினை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வவுனியா - நெடுங்கேணி பிரதேசத்தில் புளியங்குளம் பொறுப்பதிகாரியின் வாகனம் தனியார் வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் முழுமையான குடி போதையில் வாகனத்தை தனியார் வீடொன்றுக்குள் செலுத்தி உள்ளதுடன் மிக மிலேச்ச தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
எனவே, இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளை வைத்து எவ்வாறு நாட்டில் சட்ட ஒழுங்கை பேண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |