குழு மோதலில் மாணவன் பலி: ஹம்பாந்தோட்டையில் சம்பவம்
ஹம்பாந்தோட்டையில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சமோதாகம விளையாட்டு மைதானம் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை பெத்தேவல வீதியைச் சேர்ந்த மொஹம் பைரூஸ் அஸீஸ் அஹமட் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்து தாக்குதல்
ஹம்பாந்தோட்டை பாடசாலையொன்றில் இந்த மாணவன் கல்வி கற்ற வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் மாணவனும் ஹம்பாந்தோட்டை பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவன் என தெரிவிக்கப்படுகின்றது.
தந்தைக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனியார் வகுப்பு ஒன்றிற்கு சென்று திரும்பிய மாணவனே தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam