சார்ல்ஸ் நிர்மலநாதனின் குற்றச்சாட்டால் தடுமாறிய நீதியமைச்சர் அலி சப்ரி! (Video)
இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்திலும் முன்பிருந்த விதிகளே முன்கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்தக்குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குற்ற ஒப்புதல் என்ற விடயத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ள ஒருவர், அதிகாரிகளால் கூறப்படுகின்ற இடங்களில் கையொப்படும் இடும் முறையே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சார்ல்ஸ் நிர்மலநாதன், இதனை கூறியபோது குறுக்கிட்ட நீதியமைச்சர் அலி சப்ரி, நல்லாட்சியில் செய்யாத பல விடயங்கள் இந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் அவருடன் வாதிட்ட, நிர்மலநாதன், இது சர்வதேசத்தை ஏமாற்றும் வேலை என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து அலி சப்ரியினால் எதுவும் பேச முடியாத நிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri