முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் உலர்வலய மேம்பாட்டு அமைச்சராக இருந்த காலத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடான நியமனங்கள் தொடர்பாகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
உலர் வலய மேம்பாட்டு அமைச்சின் திட்ட இயக்குநராக எச்.எம். சந்திரவன்சவை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமித்ததாகவும், அவரது அமைச்சின் பதவிகளுக்கு தனக்கு நெருக்கமானவர்களை சட்டவிரோதமாக நியமிப்பதில் செல்வாக்கு செலுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019 ஜனவரி 14 முதல் ஜனவரி 31 வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான 11 குற்றச்சாட்டுகள் இந்த குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
