நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்
2025ஆம் ஆண்டில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர்.
340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப
இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர்.
இந்தநிலையில், குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆண்டு 340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
