லண்டனில் புனித ஜார்ஜ் விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்
ஐக்கிய இராச்சியத்தில் லண்டனின்(London) மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் ( St George's Festival)கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேரணியில் புனித ஜார்ஜ் கொடிகளை ஏந்தி இருந்த சில ஆண்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.
புனித ஜார்ஜ் தின பேரணி
புனித ஜார்ஜ் நிகழ்வுக்காக ரிச்மண்ட் டெரேஸில்(Richmond Terrace) ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குழுவினர் அந்த பகுதியைக் கடந்து ஒயிட்ஹால் நோக்கி சென்றுள்ளனர்.
எனவே பொலிஸார் தடுப்பு அமைத்து, குழுவினரை திரும்பச் செல்லுமாறு கேட்டபோது, அவர்கள் வன்முறையாக தடுப்புகளை தள்ளிச் சென்றுள்ளனர்.
A police horse has been hit amidst violence at London's St George's Day celebration.
— LBC (@LBC) April 23, 2024
The Met say they deployed extra officers as “far right groups and groups linked to football clubs” had travelled from around the UK. pic.twitter.com/da0FcsHQV2
இதன்போது குதிரைகளில் வந்த பொலிஸார் தலையிட்டு பாதுகாப்பை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளனர்.
மேலும் கலவரத்தில் இருந்து குறைந்தது 6 பேர் வரை கைது செய்ப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்திற்குப் பிறகு எந்த தொடர் கலவரங்களும் இல்லை என்றும் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புனித ஜார்ஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் திகதி இங்கிலாந்தில் கொண்டாடப்படுகிறது, இது இங்கிலாந்தின் பாதுகாவலர் புனித ஜார்ஜை கௌரவிக்கும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri