இராணுவ புலனாய்வுப் பிரிவின் எச்சரிக்கையால் அமைதியாக இருந்தோம்: முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர்
கோவிட் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது பொருத்தமான நடவடிக்கை அல்ல என்பதை தான் அப்போதே கூறியதாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சராக சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இராணுவ புலனாய்வுத் தகவல்
அவர் மேலும் தெரிவிக்கையில், கோவிட் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களை அடக்கம் செய்ய மறுக்கும் முடிவு, பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி இராணுவ புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
ஒரு அறிவியல் நிபுணராக, வைரஸ் ஒரு இறந்த உடலில் உயிர்வாழ முடியாது என்ற கருத்தை நான் கொண்டிருந்தேன். எனவே அவர்களின் மத நடைமுறையின்படி அடக்கம் செய்வது ஒரு பிரச்சினையாக இருக்காது. நான் இதற்காகப் பேசினேன், ஊடக சந்திப்புகளையும் கூட வழங்கினேன்.
மத நடைமுறைகளின்படி அடக்கம்
இருப்பினும், அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு எதிராக இராணுவ புலனாய்வுப் பிரிவு எச்சரித்தது. கோவிட் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது பொருத்தமான நடவடிக்கை அல்ல. அவர்களின் மத நடைமுறைகளின்படி அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நான் கூறினேன்.
இருப்பினும், எனது பரிந்துரை தோற்கடிக்கப்பட்டது. அடக்கம் செய்வது பிற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று இராணுவ புலனாய்வு எச்சரித்ததால் நாங்கள் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வருந்தத்தக்க வகையில், செய்தி அறிக்கைகள் எனது நிலைப்பாட்டை முற்றிலும் தவறாக சித்தரிக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா News Lankasri

Optical Illusion: இந்த படத்தில் முதலில் எதை கவனித்தீர்கள்.. வாழ்க்கையில் எப்படி இருப்பீங்க தெரியுமா? Manithan
