நாட்டில் மின்சார உபகரணங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் மின்சார உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறுமதி சேர் வரி 15 வீதமாக உயர்த்தப்பட்டமை மற்றும் இறக்குமதிகளுக்கான வரையறை காரணமாக மின்சார உபகரணங்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய விலைகள்
இதற்கு முன்னர் 100 மீற்றர் நீல மற்றும் பிறவுன் நிற வயர் 3800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்பொழுது அது 7600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பச்சை நிற ஒரு ரோல் வயர் 7600 ரூபாவிலிருந்து 19000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண மின்குமிழ் 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஐந்து வோட் எல்.ஈ.டி மின்குமிழ் ஒன்று தற்பொழுது 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஏனைய மின்சார உபகரணங்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.