வரலாற்றில் முதல் தடவையாக பங்குகளின் விலைச்சுட்டெண் புள்ளிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் பங்குச்சந்தை வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துப் பங்குகளின் விலைச்சுட்டெண், 10000 புள்ளிகளை கடந்துள்ளது.
பங்குச்சந்தையின் இன்றைய நாள் முடிவின்போது அனைத்துப்பங்குகளின் விலைச்சுட்டெண்கள் 10.046 புள்ளிகளாக உயா்ந்திருந்தன.
இது முதல் நாளைக்காட்டிலும் 1.33 வீத அதிகாிப்பாகும். கடந்த வாரத்தில்( வியாழக்கிழமை) அனைத்துப் பங்குகளின் விலைச்சுட்டெண்கள் 9881 புள்ளிகளாக பதிவுப்பெற்றன.
இதேவேளை இன்று பங்குச்சந்தையில் 235.9 மில்லியன் பங்குகள் பாிமாற்றம் செய்யப்பட்டன.
இதன்மூலம் 6.85 பில்லியன் வருமானம் திரட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எஸ்-பி எஸ்எல் பங்குகள் இன்றைய நாள் முடிவின்போது 3,652.61
புள்ளிகளாக இருந்தன.
இது முதல் நாளைக்காட்டிலும் 1.30 வீத அதிகரிப்பாகும்.
