கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுர பகுதிக்கு மாற்றப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகம்
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தினத்தின் 12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இது தொடர்பான நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன புதிய கட்டிட வளாகத்தை திறந்துவைத்தார்.
இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட இந்த புதிய அதிநவீன வளாகம் பாதுகாப்பு அமைச்சின் அனைத்து பிரிவுகளையும் கொண்டுள்ளது.
ஏற்கனவே இராணுவ தலைமையகம் சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், விமானப்படை மற்றும் கடற்படையின் தலைமையகங்களும் எதிர்காலத்தில்
வைக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
