2027 ஆம் ஆண்டு முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் அதிக மழைப்பொழிவுக்கு எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் 2027 ஆம் ஆண்டு வானிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கள வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ இன்று (29) ஊடகங்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
எல் நினோ தாக்கம்
அதன்படி, 2027 ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து பல பகுதிகளில் மழைப்பொழிவு கணிசமாகக் குறையும் என்றும், இதுவே எல் நினோ நிகழ்வின் இயல்பான தன்மை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய கனமழை நிலவரம் இந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்றும், அதன் பிறகு மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதைய கணிப்புகளின்படி எல் நினோ தாக்கம் 2027 ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பதுடன், அந்த காலப்பகுதியில் இலங்கை முழுவதும் மழைப்பொழிவு குறைவாகக் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட நடன கலைஞர்! நண்பர்கள் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலங்கள்