சட்டமா அதிபர் பதவியில் விரைவில் மாற்றம்
சட்ட மா அதிபர் பதவிக்கு புதியவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படலாம் என்று அரசாங்கத்துக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) காலத்தில் நியமிக்கப்பட்ட பாரிந்த ரணசிங்க, தற்போதைக்கு சட்ட மா அதிபர் பதவியில் கடமையாற்றுகின்றார்.
கடும் அதிருப்தி
இந்நிலையில் தேசிய மக்கள் அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) இரண்டாம் புதல்வர் யோஷித ராஜபக்ச(yoshida rajapaksa) ஆகியோர் மிக இலகுவாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது ஆளும் தரப்புக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் எதிர்க்கட்சிக்குச் சாதகமான அதிகாரிகள் கடமையாற்றுவதாக அதிருப்தி மனோபாவம் ஒன்றும் ஆளுங்கட்சிக்குள் எழுந்துள்ளது.
இதன் விளைவாக சட்ட மா அதிபர் ஓய்வில் அனுப்பப்பட்டு, புதிய சட்ட மா அதிபர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        