டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றம்(Video)
டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்களுடன் தொடர்புடையவற்றின் விலைகள் வேகமாக குறைந்து வருவதாக டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷமீந்திர குணசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதி மூன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
கோவிட் காரணமாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் கடந்த மாதம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது மற்றும் மீண்டும் இறக்குமதி செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்தது.

மீண்டும் இறக்குமதி ஆரம்பம்
நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுக்கு நன்றி தெரிவிக்கலாம். கடந்த மாதத்தில் மீண்டும் இறக்குமதியை தொடங்கினோம்.
விலை வேகமாக குறைந்து வருகிறது. டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.
இது கட்டுமான துறைக்கும் நல்ல அறிகுறி. இத்துறைக்கு மேலும் வரி விதிக்கப்பட்டால் டையில் ஒன்றின் விலை மீண்டும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam