அநுர தலைமையிலான ஆட்சி! எதிரணிகளை அழைத்து கம்மன்பில தீட்டும் சதி
அநுர தலைமையிலான இந்த ஆட்சியை மாற்றுவதற்குரிய தமது கடப்பாட்டை நிறைவேற்ற எதிரணிகள் முன்வரவேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை பெற்றுக்கொள்ள முடியும்.
பொருளாதார நெருக்கடி
2028 இல் இந்நாடு கடன் செலுத்தும் நாடாக மாறவேண்டுமெனில் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 5 ஆக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 2024 இல் நாம் இதனை செய்தோம்.

எனினும், தற்போது பொருளாதார வளச்சி வீதமானது 3.5 ஆகவும், அடுத்த வருடம் 3.1. ஆகவும் இருக்குமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைய முடியாமல் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். இந்நிலையில் எதிரணிகள் ஒன்றுபட்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிரணிகள் ஓரணியில் திரண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அடுத்த ஜனாதிபதி யார் என்ற விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலை வென்றெடுக்க ஒன்றுபட வேண்டும்.
ஜனாதிபதி யாரென்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். இந்த ஆட்சியைக் கவிழ்க்கும் பொறுப்பை எதிரணிகள் ஏற்க வேண்டும். எதிரணியை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri