வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மாற்றம்..!
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை மாற்றுவது தொடர்பில் தமிழரசு கட்சி மாவட்ட குழு தீர்மானித்து இருப்பதாக தெரியவருகின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பிரதேச சபைகளுக்கான தலைவர்கள் தெரிவின் போது சுழற்சி முறையில் தமது உறுப்பினர்களுக்கு தவிசாளர் பதவியை வழங்குவதாக கட்சி தீர்மானித்திருந்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
வவுனியா வடக்கு பிரதேச சபை
இது எண் பிரகார முறைப்படி முதல் ஒரு வருடம் தற்போதைய தவிசாளராக இருக்கின்ற கிருஸ்ணவேணிக்கு வழங்குவது எனவும் அடுத்த வருடம் ஏனைய உறுப்பினர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் எனவும் கட்சியின் மாவட்ட குழு தீர்மானித்திருந்த நிலையிலே எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னராக பதவி விலகல் கடிதத்தினை தருமாறும் கட்சியின் மாவட்ட குழு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானித்து அவருக்கு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் தற்போதைய தவிசாளர் எதிர்வரும் 18ஆம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தை கொடுப்பாரா என்கின்ற கேள்வி எழுந்திருப்பதுடன் வவுனியாவில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் வவுனியா வடக்கு பிரதேச சபையிலேயே பெண் தவிசாளர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரத்தில் சஜித் பிரேமதாச அரசாங்கத்துடன் ரகசிய டீல்! கட்சிக்குள் பலத்த ஐயம்
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri