ஜனாதிபதி ரணிலால் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி கூறும் மகிந்தானந்த
ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் வெகுவாக அதிகரித்திருந்த பல அத்தியவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தனது கட்சியை வளர்க்கவில்லை
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், ஐக்கிய தேசிய கட்சியை வளர்க்கவோ அல்லது கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவோ நடவடிக்கை எடுக்காது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பொருளாதார மேம்படுத்த நடவடிக்கை எடுப்பார்
நாட்டில் காணப்பட்ட சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளை ஜனாதிபதி இல்லாமல் செய்தார். அதேபோல் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.