நடக்க முடியாது வீட்டுக்குள் முடங்கிய சந்திரிக்கா - நம்பமுடியாத அதிர்ச்சி தகவல்..!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகப்பூர்வ வீட்டிலிருந்து வெளியேறிய விடயம் இலங்கையில் பேசுபொருளாக இருக்கும் அதேவேளை,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வெளியேற்றம் குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.
அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அவர் வசிக்கும் அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று வாரங்களுக்கு முன்பு கீழே விழுந்த பிறகு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து தான் மீண்டு வந்துள்ளேன்.
மாடியிலிருந்து கூட கீழே செல்ல முடியாது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...




