சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசியலில் களமிறங்கும் சந்திரிக்காவின் மகன்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய லங்கா சுதந்திரக்கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வழிக்காட்டலில் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்திரிக்கா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு, களுத்துறை மாவட்டத்தின் தலைவராகவும் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலில் களமிறங்கும் விமுக்தி குமாரதுங்க
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது மகன் அரசியலுக்கு வருவதை முன்னர் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமது புதிய கட்சியில் இணைந்துகொள்ளுமாறு விமுக்தி குமாரதுங்கவுக்கு ஏற்கனவே குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan