இலங்கையில் அரசியல் பிரவேசம்! சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்த சந்திரிக்காவின் மகன்
கடந்த சில தினங்களாக ஊடகங்களில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் மகன் இலங்கை அரசியல் களத்தில் நுழைவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கைகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க மறுத்துள்ளார்.
இந்நிலையில்,அவர் தனது அரசியல் பயணம் குறித்து தெளிவுப்படுத்தி அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 21 ஆண்டுகளாக, நான் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றேன், கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை கண் மருத்துவத்தில் நிபுணத்துவ பயிற்சிக்காக, என் தொழிலுக்கு முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.
நான் என் தாய் நாட்டை நேசிக்கின்றேன். எனது தனிப்பட்ட திறன்கள் மூலம் முக்கியமானதாக நான் கருதும் சமூகப் பணிகளில் வேலை செய்வேன் என்று நம்புகின்றேன்.
ஆனால் இலங்கையில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறியுள்ளேன்.
எனவே, எதிர்காலத்தில் இலங்கையில் நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பேன் என்று எதிர்பார்க்கும் அறிக்கைகளை நிராகரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
