சுதந்திரக்கட்சியில் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் சந்திரிக்கா
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தமது தரப்பு ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதில் சந்திரிக்கா குமாரதுங்க(Chandrika Kumaratunga) தரப்பு தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் தேசிய சம்மேளனத்தை நடத்துவதற்கான ஒழுங்குகளை சந்திரிக்கா தரப்பு மேற்கொண்டுள்ளது.
மைத்திரியின் ஆதிக்கம் நீங்கிவிடும்
குறித்த தேசிய சம்மேளனம் நடைபெற்றால் அதன் பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின்(Maithripala Sirisena) ஆதிக்கம் முற்றாக நீங்கிவிடும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆதரவைப் பெற்றுள்ள அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா(Nimal Siripala De Silva), மகிந்த அமரவீர(Mahinda Amaraweera), இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரின் ஆதிக்கம் கட்சிக்குள் வலுப்பெற்றுவிடும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக சுதந்திரக் கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை மாவட்ட ரீதியாக கொழும்புக்கு அழைத்து எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களையும் சந்திரிக்கா தரப்பு நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |