பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நேற்று (06.02.2024) இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் திஸர குணசிங்க கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25 வீத பிரதிநிதித்துவமும் செயற்குழுவில் 50 வீத அதிகாரமும் கிடைக்கும்.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய உறுப்பினர்களை எதிர்வரும் 22ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக புதிய உறுப்பினரொருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
