46 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை! ஜனாதிபதி தெரிவிப்பு
46 ஆண்டுகளின் பின்னர் முதல்தடவையாக இலங்கை உபரி நிலையை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் இன்று ஆரம்பமானது.
இதன்போது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி உரை
2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலையை அடைய முடிந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் 6 ஆவது தடவையாக இலங்கையால் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.