சந்திரிகா - நளிந்த இடையே விசேட சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்போது, சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வைத்தியசாலையினால் வழங்கப்படும் சேவைகளை, குறிப்பாக கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வைத்தியசாலையின் வெளிநோயாளிப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு மற்றும் ஆய்வகச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின் செயற்பாடுகள் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது.
விசேட சந்திப்பு
அத்துடன், வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்களான ஜனக கித்சிறி குணவர்தன, சமிகா கமகே, பிரதிப் பணிப்பாளர் நாயகங்களான வைத்தியர் அர்ஜுன திலகரத்ன, சமித்தி சமரகோன், தலைமை நிதி அதிகாரி ஜி.எஸ். கருணாரத்ன மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கயான் ரணவீர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சீதுவை விஜய குமாரதுங்க நினைவு வைத்தியசாலையை மேலும் நவீனமயப்படுத்தி, அதனைச் சூழவுள்ள மக்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.