இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிக்கு வித்திட்ட தமிழன்: குவியும் பாராட்டுக்கள் - செய்திகளின் தொகுப்பு
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செலுத்திய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி, சாதனை படைக்கும் நிலைக்கு வித்திட்டவர் ஒரு தமிழர் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானியே அவராவார். சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி இவர் நியமிக்கப்பட்டார்.
2016ஆம் ஆண்டு, வீரமுத்துவேல் விண்கலத்தின் மின்னணுப் பொதியில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறை குறித்த தனது கட்டுரையை எழுதியிருந்தார். அவரது ஆய்வுக் கட்டுரை தொடர்பாகப் பெங்களூரில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இதுவே வீரமுத்துவேலை 2019ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குநராக்கியது. சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கிய பங்காற்றினார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |