வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் விண்கலம்: சாதனைப் படைத்த இந்தியா (Video)
புதிய இணைப்பு
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செலுத்திய சந்திரயான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கியுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செலுத்திய சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க சில மணி நேரங்களே உள்ளன.
அதற்கான நேரக்கணிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.