வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு விவசாயிகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று (13.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெள்ள நிலவரத்தில் மிஞ்சும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள வயல் நிலங்கள்
எங்களுக்கு தற்போதைய உற்பத்திச் செலவு கிலோ ஒன்றுக்கு 145 ரூபாயாக உள்ளது. ஆக குறைந்தது 175 ரூபாய்க்கு அந்த நெல்லை நாங்கள் விற்றால் தான் நாங்கள் ஓரளவாவது நஷ்டத்திலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இயற்கை அனர்த்தம் காரணமாக எமது விவசாயிகளின், சுமார் 50,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளரை சந்தித்து அதற்குரிய நஷ்ட ஈட்டிற்குரிய வேலைகளை நெறிப்படுத்துமாறும் அவரிடம் கேட்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |