கடிதம் எழுதிவைத்து நடுவீதியில் தீக்குளித்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (26) காலை ஒருவர் தீக்குளித்து தவறான முடிவெடுத்துள்ளார்.
இதன்பின்னர், கடுமையான தீக்காயங்களுடன் லிந்துல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவு
ஹட்டன் பகுதியை சேர்ந்த குறித்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

தனது குடும்ப உறுப்பினர்கள் தனது குழந்தைகளிடமிருந்து தன்னைப் பிரித்துவிட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ஹட்டன் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், அந்த முறைப்பாட்டில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri