78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில் சந்தன அபேரத்ன அறிவிப்பு
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை. மாறாக ஜனாதிபதி தலைமையிலேயே நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(29.01.2026) நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமுகர்கள் அழைப்பு
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4ஆம் திகதி “கட்டியெழுப்புவோம் இலங்கையை” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் நடந்த ஊடக சந்திப்பில், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, வெளிநாட்டுப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன,
"கொழும்பிலுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வெளிவிவகாரத்துறையுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்பார்கள். மாறாக வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan