பெரியகல்லாறு கோவிட் வைத்தியசாலைக்கு சாணக்கியன் திடீர் விஜயம்

Batticaloa Shanakiyan Covid hospital
By Kumar May 23, 2021 05:45 PM GMT
Report

பெரியகல்லாறு பகுதியில் கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

கோவிட் வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்களின் பிரச்சினை தொடர்பாகவும், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அவர் இதன்போது ஆராய்ந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த வைத்தியசாலைக்கு உணவினை விநியோகிப்போருடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன், உணவின் தரத்தினை பேணுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன்,

“நாட்டில் தற்போது அனைத்து பிரதேசங்களிலும் கோவிட் தொற்று மிக மோசமாக பரவிக் கொண்டுவரும் நிலையில், பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக இது குறித்து ஆராயும் நோக்கில் இங்கு வருகை தந்திருந்தேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் இங்குள்ள கோவிட் வைத்தியசாலைகளில் 96 வீதமான கட்டில்கள் நிரப்பப்பட்டுள்ளன. எனவே மேலதிகமாக வைத்தியசாலைகளை அமைத்து நோயாளர்களை அனுமதிக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டுவரப்படும் அன்டிஜன் சோதனை கருவிகளின் எண்ணிக்கை ஆயிரமாகவே காணப்படுகின்றது. ஆறு இலட்சம் பேர் உள்ள ஒரு மாவட்டத்தில் வாரத்திற்கு ஆயிரம் அன்டிஜன் பரிசோதனைகளே செய்யப்படுகின்றன.

பி.சி.ஆர் பரிசோதனையினை எடுத்துக்கொண்டால் நாளொன்றிற்கு 400 இற்கும் குறைவாகவே செய்யப்படுகின்றன. இதன் காரணமாக ஆபத்தான சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இதையும் விடக் கவலையான ஒரு விடயம் என்னவென்றால் இந்த கோவிட் காலத்தில் கூட, மக்களினுடைய நலனைப் பற்றிச் சிந்திக்காமல் ஒரு சிலர் தங்களுடைய வியாபாரத்தில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர்.

இந்த வைத்தியசாலையில் 150 கட்டில்கள் உள்ளன என்றால், ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்குச் சாப்பாட்டிற்கான செலவு 850 அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.ஆனாலும் உணவின் தரம் குறித்து வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

மக்கள் கோவிட் தொற்று காரணமாகவே இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களே தவிர, அவர்கள் எந்த வகையிலும் வசதி குறைந்தவர்களோ, அல்லது சாப்பிட வழியில்லாதவர்களோ அல்ல. எனவே போசாக்கு மிக்க உணவுகளை வழங்க வேண்டியது, உணவு வழங்குபவர்களின் கடமை“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US