நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள சாமர சம்பத்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்காக அவர் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமர சம்பத்
100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான 06 நிலையான வைப்பு கணக்குகளை முதிர்ச்சிக்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் 1.73 மில்லியன் 1.73 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இருப்பினும், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பாக அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தபோது, பாலர் பள்ளி மாணவர்களுக்கு பைகளை விநியோகிப்பதாகக் கூறி, அரச வங்கியொன்றிலிருந்து ஒரு மில்லியன் ரூபா அனுசரணைப் பெற்ற சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 10 மணி நேரம் முன்

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan
