600க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாவை இரத்து செய்த ட்ரம்ப்!
அமெரிக்காவில் உள்ள 90 பல்கலைக்கழகங்களில் 600ற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்களை ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆயா்வு செய்த அந்நாட்டு வழக்கறிஞர்களின் அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
விசாக்கள் நிறுத்தப்பட்ட அனைத்து மாணவர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா அல்லது தங்கள் கல்வியைத் தொடர தங்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
விசா இரத்து
விசாக்களை இரத்து செய்ய நிர்வாகம் பின்பற்றும் செயல்முறை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த தெளிவையும் வழங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் விசா இரத்து குறித்து பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவிக்கவில்லை என்று குறித்த அமைப்பு கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
