தமிழரை ஒருபோதும் கைவிடவேமாட்டோம்! அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி
எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள்
"வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், கடந்த இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள். இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள், எமது கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கினார்கள்.
அதேபோல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் எமது கட்சிக்குப் பேராதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம். எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்.
நாட்டில் இனவாதம், மதவாதம் இல்லாத ஒரேயொரு கட்சியே தேசிய மக்கள் சக்தி. அதனால்தான் தமிழ் மக்கள் எமது கட்சிக்கு அமோக ஆதரவு வழங்குகின்றார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியே தீருவோம்.
இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போல் தமிழ், முஸ்லிம் மக்களும் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
