முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிணையில் செல்ல அனுமதி
அதன் பின்னர் அவர் அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 01ம் திகதி முன்னிலையாகிய போது எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.
அதனை தொடர்ந்து இன்றையதினம்(8) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam