இந்தியாவுக்கு பயணமாகிறார் அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரமுகர்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு 5நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அவர் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதற்காக அமெரிக்காவின் 2ஆவது பெண்மணியான, அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களின் குழந்தைகளும் அவருடன் வருகைத்தரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மூத்த உறுப்பினர்கள்
இதுதவிர, அந்நாட்டின் அரசு நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களும் வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜே.டி. வான்ஸ் எதிர்வரும் 21ஆம் திகதி டெல்லியில் அந்நாட்டு பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வான்சும், அவருடைய குழுவினரும் பங்கேற்பதுடன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரங்களுக்கும் வான்ஸ் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
