ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இது நடக்கலாம்: சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015ஆம் ஆண்டுக்குப் பின் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மோதலை ஏற்படுத்தும் நடவடிக்கை
இதேவேளை முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும் பௌத்த இஸ்லாமிய அடிப்படையில் மோதலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது இன மதப் பிளவுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |