மின் கட்டண உயர்வு குறித்து சம்பிக்க ரணவக்க கடும் சாடல்
அரசின் நிலக்கரி ஊழல் காரணமாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமையாது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று(02) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், "அநுரகுமார திஸாநாயக்கவின் அரசு இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

அரசு 13.5 சதவீத அதிகரிப்பைக் கோரியிருந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை 10.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எனினும், வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின் கட்டணம் 13.5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பானது கைத்தொழில் துறைக்கு 8.7 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த அதிகரிப்பு காரணமாக நாட்டின் தொழிற்துறை பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். அத்துடன், மின்சார சபையைக் கலைப்பதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமாரவே ஏற்றுள்ளார்.
சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் சபையிலிருந்து விலக இணங்கியுள்ள நிலையில், அவர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பான விடயங்களும் தற்போதைய கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளன.
பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில்
அரசு முன்னெடுத்துள்ள நிலக்கரி ஊழல்களின் விளைவையே இன்று மக்கள் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அனுபவிக்கின்றனர்.

இவ்வாறான பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், இம்முறை மலரும் புத்தாண்டு மக்களுக்குச் சுபீட்சமான ஒன்றாக அமையப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri