ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாமரி அத்தபத்து சதம்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து, மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மலேசியாவுக்கு எதிரான மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட மூன்றாவது சதம் இதுவாகும்.
119 ஓட்டங்கள்
இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய அதபத்து 69 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மலேசியாவிற்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இலங்கையால் நிர்ணயிக்கப்பட்ட 184 ஓட்டங்களை நோக்கி மலேசிய அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri